சிறீலங்கா தொடர்பில் காட்டமான அறிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு

53
72 Views

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா தொடர்பில் காட்டமான அறிக்கை ஒன்றை முன்வைக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிசேல் பசெலட் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த அறிக்கையை ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு வெளியிடவும், ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்துள்ளார். அதன் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது அவரின் திட்டம்.

சிறீலங்கா அரசுக்கும் இந்த அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்கா அரசு அதற்கான பதிலை இன்றுவரை வழங்கவில்லை என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தாரங்கா பாலசூரியா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் 22 ஆம் நாள் முதல் மார்ச் மாதம் 19 ஆம் நாள் வரை இடம்பெறும் இந்த கூட்டத்தொடரில் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானம் தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றையும் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் சிறீலங்கா அரசின் தோல்வி தொடர்பில் விமர்சனங்கள் இருக்கும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரசு முன்னைய தீர்மானத்தில் இருந்து வெளியேறியது குறித்து தனது கவலையை கடந்த செப்படம்பர் மாதம் வெளியிட்ட ஆணையாளர் இது தொடர்பில் ஆணைக்குழு அதிக அக்கறை காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here