இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

இலங்கை விமான நிலையங்களை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து வைத்துள்ள நிலையில், சுமார் 15 விமானங்கள் இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக 10 மாதங்களாக இந்த நிலையங்கள் மூடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய விமான நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டதுடன், சுற்றுலாத்துறை சார்ந்தவர்களை மீண்டும் நாட்டிற்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 07.40 அளவில் ஒமானி லிருந்து வணிக விமானம் ஒன்று 50 பயணிகளுடன் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.