சமய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா

அனைத்துலக சுகாதார விதிகளுக்கு அமைவாக சமைய நிகழ்வுகளை கடைப்பிடிப்பதற்கான மக்களின் உரிமைகளை சிறீலங்கா அரசு மதிக்க வேண்டும் என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் இறந்தவர்களுக்கு நாம் அனுதாபங்களை செலுத்தும் அதேசமயம் நாம் அவர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். மக்கள் தமது சமய முறைகளை கடைப்பிடிக்க யுடிஎச்ஆர் சரத்து 18 அதிகாரம் வழங்கியுள்ளது. அதனை சிறீலங்காவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கோவிட்-19 உலகலாவிய ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் அதனை பயன்படுத்தி மக்களின் நம்பிக்கைகளை புறக்கணிப்பதாக அமையக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.