மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிறீலங்காவுக்கு பிரித்தானியா இராணுவப் பயிற்சி

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு பிரித்தானிய அரசு இராணுவப் பயிற்சி உதவிகளை வழங்கியது தொடர்பில் விசாரணைகள் வேண்டும் என ஆயுத வியாபாராத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களில் பிரித்தானிய அரசு 130 நாடுகளின் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளது. அதில் சூடான், சிறீலங்கா, சீனா, சவுதி அரேபியா, பஹரைன் சிம்பாபே ஆகிய நாடுகளும் அடங்கும்.

இந்த நாடுகளின் படையினர் தாம் பெற்ற பயிற்சிகளை மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தி வருவதாக அது குற்றம் சுமத்தியுள்ளது.