குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் – தமிழ்த் தரப்பு கூட்டாக கோரிக்கை

103
192 Views

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கோ பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள் எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம்வகிக்கும் 42 நாடுகளின் தூதரகங்களின் தலைவர்களிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிற்கு தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில்சமூக பிரதிநிதிகளும் பின்வரும் மூன்று கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்துள்ளனர்.

ஐக்கியநாடுகளின் ஏனைய உறுப்புகளான ஐக்கியநாடுகள் பாதுகாப்புசபை- ஐக்கியநாடுகள் பொதுச்சபை போன்றவை இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு இந்த விடயத்தினை பாரப்படுத்துவதன் மூலம் இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றம் ஆகியன குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என உறுப்புகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் புதிய தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் விடயங்களை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள்; மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் தொடரும் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையை தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஆணையையும்,இலங்கையில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின அலுவலகத்தின் பிரசன்னம் காணப்படுவதற்கான ஆணையையும் வழங்கவேண்டும்.

முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திலிருந்து கவனத்தை திருப்பாமல் சிரியாவிற்கான சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை போன்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here