கொரோனா நிலை சீராகும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாது – உதய கம்பன்பில

33
114 Views

நாட்டில் கொரோனா தொற்றின் நிலை சுமுகமாகும் வரையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சுகாதார நிலையைக் கருத்திற்கொண்டு தேர்தலை நடத்திருக்க ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மீண்டும் நாடு வழமைக்கு திரும்பும் போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மீளாய்வு செய்து அரசாங்கம் முடிவை அறிவிக்கும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு பழைய தேர்தல் முறையின் அடிப்படையில் நடத்தப்படும் எனக் கடந்த மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச் சரான ஜனக பண்டார தென்னக்கோன் பழைய முறைப்படி மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதேவேளை விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஷவும் கட்சித் தலைவர் உட்பட தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட விதிகள் தொடர்பாக ஆராயும் பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here