மட்டக்களப்பில் கன மழை –  மக்கள் பெரும் பாதிப்பு

33
48 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பின் 5 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1,452 குடும்பங்களைச்  நேர்ந்த 4,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும்

4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அரசாங்க அதிபர் கூறுகையில், கடந்த 3 தினங்களாக தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தினால் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2027 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 401  குடும்பங்களைச் சேர்ந்த 1477 பேரும், மண்முணைப்பற்று பிரதேச செயலகப்பரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும், மண்முணை தெற்கு மேற்கு பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த 68 குடும்பங்களில்198 பேரும் போராதீவு பிரதேச செயலகப்பிரிவில் 162 குடும்பங்களைச்சேர்ந்த 482 பேர் உட்பட 4639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் குளங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து உன்னிச்சை,நவகிரி, றூகம் ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here