மீண்டும் தலை தூக்கும் தமிழ் முஸ்லீம் உறவு- முஸ்லீம் குடும்பங்களுக்காக உதவிகளை வழங்கும் தமிழர்கள்!

63
87 Views

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தமிழ் முஸ்லீம் மக்களுக்கு இடையிலான உறவில் பாரிய முன்னெற்றங்கள் இடம்பெற்று வருகிறது.

முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிப்புக்கு பின்னர் முஸ்லீம் மக்களுக்காக தமிழ் தலைவர்கள் குரல் கொடுத்து வந்த நிலையில் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கி இருந்தனர்.

எனவே எதிர்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகள் மீது கைவைத்தால் அவர்களுக்காக போராடுவதற்கும் முஸ்லீம்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியாக கொண்டு செல்வதற்கு தமிழர்களால் மட்டுமே முடியும் என்ற நிலையில் வரலாற்றில் இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தமிழர்களுக்காக முஸ்லீம்களும் முஸ்லீம்களுக்காக தமிழர்களும் ஒன்று பட்டு செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் படி தமிழ் மக்களின் உதவி திட்டங்கள் தற்போது முஸ்லீம் சமூகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு தொகை பணத்தினை தமிழரான வைத்தியர் மேகநாதன் கதிரெசப்பிள்ளை( Dr Mehanathan Kathiresapillai Dental Surgeon – E Dent ) இன்று (12/012021) வழங்கி வைத்துள்ளார்.

KMM கலீல் (Bilaal) ஹாஜியாரின் ஒருங்கிணைப்புடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் SHM அஸ்பர் இடம் இந்த உதவிகளை கையளித்துள்ளனர்.

காத்தான்குடி மக்கள் சார்பாக சகோதர சமூகம் சார்பான இந்த மனிதாபிமானப் பணிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here