தமிழர்களின் மேய்ச்சல் நிலப் பகுதியில் தொடரும் பசுக் கொலை

பொலநறுவை மற்றும் அம்பாறைப் பகுதியிலிருந்து அத்துமீறி பயிர்ச் செய்கையில் ஈடுபடும் பெரும்பான்மை சமூகத்தினரால்  மயிலத்தமடு மற்றும் மாதவனை  பகுதியில் மேய்ச்சல் தரையில் உள்ள  பசுமாடுகள்  கொலை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மேய்ச்சல்தரை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

PL 01012020 SPP CMY 1 தமிழர்களின் மேய்ச்சல் நிலப் பகுதியில் தொடரும் பசுக் கொலை

நேற்றைய தினம்  சுமார் ஆறு பசுமாடுகள்  துப்பாக்கியால் சுடப்பட்டும்,  உழவு இயந்திரத்தினால் அடித்தும், அத்துடன்  வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

IMG 20201225 WA0010 தமிழர்களின் மேய்ச்சல் நிலப் பகுதியில் தொடரும் பசுக் கொலை

அதில்  குற்றுயிராக காயப்படுத்தியும்,  கொலை செய்த பசுக்களையும் இறைச்சிக்கான பகுதிகளை எடுத்துவிட்டு  எச்சங்களை வீசிவிட்டுச் சென்றுள்ளதாகவும்  உயிரிழந்த பசு மாடுகளின் உரிமையாளர் தெரிவித்தார்.

IMG 20201225 WA0005 தமிழர்களின் மேய்ச்சல் நிலப் பகுதியில் தொடரும் பசுக் கொலை

வயிற்றில் பசுக்கன்று உள்ள பசு மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்திவிட்டு வயிற்றில்  இருந்த சிறிய கன்றை எறிந்துவிட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றவர்கள் பண்ணையாளர்களை  ஒவ்வொரு நாளும் அச்சுறுத்துவதுடன், தினமும் அழித்து வருவதையும் காணமுடிகின்றது.

அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் மயிலத்தமடுப் பகுதிக்கு வந்து பார்த்து விட்டுச் சென்றாலும்,  எந்தத் தீர்வும் கிட்டவில்லை என பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மயிலத்தமடு  மற்றும் மாதவனைப் பகுதிக்கு  மாடுகளைக் கொண்டு செல்லுங்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.  ஆனால் இங்கு அத்துமீறிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றவர்கள் எங்களைத் துரத்துகிறார்கள்.  நாங்கள் என்ன பசுமாடுகளை கடலில் கொண்டு விடுவதா என பண்ணையாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

IMG 20201225 WA0011 தமிழர்களின் மேய்ச்சல் நிலப் பகுதியில் தொடரும் பசுக் கொலை

ஒவ்வொரு நாளும் எங்களுடைய பசுமாடுகளை அடித்தும், சுட்டும் கொல்லுகின்றார்கள். கடந்த காலத்திலிருந்து இப்பொழுது வரைக்கும் எங்களுடைய பசுமாடுகள் களவாடப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுக் கொல்லப்பட்டும், வெட்டிக் கொலை செய்தும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றார்கள். இதனால் தமது பொருளாதாரம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG 20201225 WA0006 தமிழர்களின் மேய்ச்சல் நிலப் பகுதியில் தொடரும் பசுக் கொலை

காலங்காலமாக கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளப்படும் தமது மண் அபகரிக்கப்பட்டு அத்துமீறிய குடியேற்றங்கள் முன்னெக்கப்படுவது ஒரு இனத்தின் மீதான அடக்குமுறையாகும் என  பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.