ஆழிப்பேரலையில் மரணமடைந்தவர்களுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி

2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் நாள் இடம்பெற்ற ஆழிப்பேரலை சம்பவத்தில் பலியானவர்களுக்கு தமிழர் தாயகத்தில் இன்று (26) நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலை நினைவிடத்தில் தமது அகவணக்கத்தை தமிழ் மக்களும் அரசியல் தலைவர்களும் செலுத்தினர்.

பிரதான நினைவுச் சுடரை தமிழரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றினார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செ. கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தவக்குமார் ஆகியோர் இணைந்து பிரதான சுடரை ஏற்றினர்.

tsunami 2020 1 ஆழிப்பேரலையில் மரணமடைந்தவர்களுக்கு முல்லைத்தீவில் அஞ்சலிஇதில் பெருமளவான மக்களும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

tsunami 2020 3 ஆழிப்பேரலையில் மரணமடைந்தவர்களுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையில் சிறீலங்காவில் 40,000 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மரணமடைந்திருந்தனர்.