கொரோனா பரவல் குறித்து விசாரணை அவசியம் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

85
190 Views

கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது நத்தார் ஆராதனையின் போது    தெரிவித்துள்ளார்.

கந்தானை சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், உலகலாவிய தொற்று தானாக உருவானது என மக்கள் கருதமுடியாது என தெரிவித்த அவர், அதிகாரத்தில் உள்ளவர்கள் சூழலை அளிப்பதும் மோசமான வறுமையும் கரிசனைக்குரிய விடயங்கள் என்றார்.

மேலும் பொருளாதாரம் வளம் என்பது சமூகத்தின் சிறிய குழுவினரின் கரங்களிலேயே காணப்படுகின்றது என்றும் கொரோனா வைரஸ் வறியமக்களை மோசமாக பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here