ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை ஜனவரியில் – விசாரணை இன்றுடன் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. இறுதிநாளான இன்று குருநாகல் போதனா வைத்திய சாலையின் மருத்துவர் முஹமது ஷபி ஷிஹாப்தீனிடம் ஆதாரங்களை ஆணைக்குழு பெற்றுக் கொள்ளும் என்று தெரியவருகின்றது.

2019 ஏப்ரல் 21 அன்று நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர். 500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார். இந்தக் குழு தாங்கள் நடத்திய விசாரணைகள், புலனாய்வில் கண்டறிந்த விடயங்களை அறிக்கையாக வரும் ஜனவரிமாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கும் என்று ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன