முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கைது

74
154 Views

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இன்று  காலை 6.30 மணியளவில்  கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர்,கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சதோச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பு செல்ல இருப்பதை  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறி அவரைக் கைது செய்துள்ளதாக  அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here