போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

தாயகத்தில் கடந்த காலங்ளில் இடம்பெற்ற ஆயுதவளிப் போராட்டத்தில் தமது உறவுகள், உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உடுத்த உடைகளுடன் இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களுக்குள் மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு பல மாதங்ளின் பின் தத்தம் ஊர்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் மீள்குடியேற்றப்பட்ட வடக்கு கிழக்கு, மாகாண தமிழ் உறவுகள் காடுவெட்டி நாடாக்கி குளம்தொட்டு வளம்பெருக்கிக் கொண்டனர்.

DSC05428 போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாயம், மீன்பிடி, சுயதொழில் என ஓய்வின்றி கடினமாக உழைத்து போரின் தாக்கத்தில் இருந்து ஓரளவு மீண்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ‘வெந்த புண்ணில் வேலைப் பாச்சியது போல’ இயற்கையும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் தனது சீற்றத்தைக் காட்டி மீண்டும் தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பார்க்கின்றது.

DSC05443 போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

கடந்த காலங்களில் சீரற்ற காலநிலையால் மழைவெள்ளம், கடலின் சீற்றம், சூறைக்காற்று, இடி மின்னல் என இயற்கை அனர்த்தங்களினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் பொருட்சேதங்களும் ஏற்பட்டிருந்தது.

இந்த வருடம் புயல்காற்றுடன் கூடிய வானிலையால் வடக்கு மாகாணத்தில் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.  கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 1,926 குடும்பங்களை சேர்ந்த 5,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

அத்துடன் 3 வீடு முழுமையாகவும், 276 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

DSC05483 போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி புயலால் அழிவடைந்துள்ளன. கடும் மழை மற்றும் புயல் காரணமாக குலைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுவரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

புரேவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுகள் கடல் நீர் தடுப்பணை மற்றும் நங்கூரமிடும் வசதிகள் இன்மை காரமாகவே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

மேலும், யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இப்போது 22,624 குடும்பங்களை சேர்ந்த 75,013 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 387 குடும்பங்களை சேர்ந்த 1,332 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 93 வீடுகள் முழுமையாகவும், 2,970 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

DSC05457 போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்கு 143 குடும்பங்களைச் சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவிக்குற்பட்ட கற்குளம் படிவம் 4 கிராமத்தில் வசிக்கும் மக்களும் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடற்சியாகப் மழைவீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் கற்குளம் கிராமத்தில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 37 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தகரக் கூடாரங்களுக்குள்ளும், மண் வீடுகளுக்குள்ளும் கைக் குழந்தைகள் கற்பிணித்தாய்மார்கள், வயதுமுதிர்ந்தவர்களென பலரும் இக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது பொழிந்துவரும் அடை மழை காரணமாக மக்கள் வசிக்கும் கூடாரங்களின் சுவர்கள் ஊறியும் இடிந்து விழும் அபாயநிலையில் இருக்கின்றது. வீடுகளுக்குள் மழைநீர் ஊற்றெடுத்து காணப்படுகின்றது. மலசலகூடம், நிரந்தரவீடு, மின்சாரம், குடிநீரென அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்டுப்பகுதியை அண்டிய சூழலில் மக்கள் பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

போருக்குப் பிந்திய காலங்களில் தாயகத்தில் தமிழீழ அரசாங்கத்தினால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்ட இயற்கை வளங்கள் சுறண்டப்பட்டன, காடுகள் கட்டுமீறி அழிக்கப்பட்டன, பாரிய மரக்கடத்தல்கள் அரசின் ஆதரவுடனேயே நடைபெற்றது.

ஆறுகளில் அதிகளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டன, காடுகளுக்குள் பாரிய கிடங்குகள் வெட்டி கிரவல் வெட்டப்படுகின்றன. ஆரியவகை காட்டு உயிரினங்கள் வேட்டையாடப் பட்டன, விவசாயத்தில் நச்சு கிருமிநாசினிகள் பயண்படுத்தப்பட்டன.

உயிரினங்களுக்கு தீங்கு விழைவிக்கும் நச்சுவாயுக்களை வெளிப்படுத்தும் பாரிய தொழிற்சாலைகள் எந்தவித சுகாதார நடைமுறைகளும் இன்றி நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.

DSC05437 போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

இவ்வாறு இயற்கையின் சமனிலையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் சிறீலங்கா அரசின் ஆதரவுடன் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அதிகம் இடம்பெறுகின்றது. இவ்வாறான பல காரணங்களினால் இயற்கையும் சீற்றமடைந்து மக்கள் வாழும் பிரதேசங்களை மிகையாகத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான அனர்த்தங்களின் போது அரச உதவிகள் எதுவும் இல்லாமல் கிராமப்புறங்களில் தற்காலிக கூடாரங்களிலும் குடிசைகளிலும் அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் மக்கள் மிகையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிப்புக்களில் இருந்து மீளமுடியாமல் வாழும் கிராமப்புற உறவுகளுக்கு தற்போது அவசர நிவாரண உதவிகள், உலருணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா, கூரைவிரிபுகள், நுளம்புவலைகள், தேவைப்படுகின்றன.

  c 3 போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்

புலத்தில் இருக்கும் உறவுகள் தாயகத்தில் பாதிக்கப்பட்டு அன்றாடம் வாழ்வதற்கே போராடிக் கொண்டிரும் அவர்களின் தேவைகளில் ஒன்றையாவது நிவர்த்திசெய்தற்கு உங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டி உதவுவது காலத்தின் தேவை.