வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு  மனநோய்  -இரா.சாணக்கியன்

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு  மனநோய்  உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

01 8 வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு  மனநோய்  -இரா.சாணக்கியன்
 

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இரண்டு சபை உறுப்பினர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்தரப்பினர் சபையை நடாத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தினார்கள்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் குறித்த இடத்திற்கு வருகை தந்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய சமயத்தில் சம்பவ இடத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பின் அவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

01 3 வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு  மனநோய்  -இரா.சாணக்கியன்
 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சபை செயலாளரை  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ச்சியாக வரக்கூடிய நோய் உள்ளதாக வைத்தியா்  கூறினார். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மனநோய் என்றுதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காணப்படுகின்றது.

2008ம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தார்களோ அதேபோன்று மறு உருவம் எடுத்துள்ளதை இன்றைய வாழைச்சேனை பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் நிரூபித்துள்ளது.” என்றார்.