மகாகவி பாராதியின் 138ஆவது பிறந்த நாள் – மட்டக்களப்பில் சிலை திறப்பு

87
226 Views

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு  ஊறணியில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் தலைவர் இ.மு.றுஸ்வின் தலைமையின் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

இந்நிலையில், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தின நிகழ்வு யாழில்  உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சிவிகேஎஸ் சிவஞானம் யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன் சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரன் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here