கொரோனா: தமிழரின் வாழ்வியலில் தடுப்பு முறைகள் இயல்பாகவே உள்ளது

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. எல். எம். நக்பரின் சிந்தனையில், முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தலைமையிலான நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கூட்டு முயற்சியில் கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான விழிப்பூட்டல் நிகழ்வு பாண்டிருப்பில்  நடைபெற்றது.

நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கல்முனை செயற்பாட்டாளர் அ. கமலநாதன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் கல்முனை வடக்கு பிரிவு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ், பாண்டிருப்பு ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ. ஆர். அப்துல் ஹாபில், வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ எம். பியின் விசேட பிரதிநிதி லக்‌ஷன் டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

e08b0905 d585 409d 995d 01fe9278d0eb கொரோனா: தமிழரின் வாழ்வியலில் தடுப்பு முறைகள் இயல்பாகவே உள்ளது

டாக்டர் நக்பர் இங்கு சிறப்புரை ஆற்றியபோது,   “உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் தப்பித்து கொள்ள முடியும், தமிழ் உறவுகளை கொரோனா தொற்று பீடித்து கொள்வது அரிதாகவும், குறைவாகவும் இருப்பது அவதானிக்கப்பட்டு உள்ளது, ஏனென்றால் கொரோனா தொற்று பரம்பலுக்கு எதிரான தடுப்பு முறைகளை தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைமை இயல்பாகவே கொண்டிருக்கின்றது.

துளசி செடி தமிழர்களின் குறிப்பாக இந்துக்களின் வாழ்வியலில் தெய்வீகத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு பின்னி பிணைந்ததாக விளங்குகின்றது, சாம்பிராணி புகை காட்டப்படாத தமிழர் இல்லங்கள் இருக்க முடியாது, இஞ்சி, கொத்துமல்லி, மஞ்சள், மர மஞ்சள், சிற்றகத்தி, நில வேம்பு ஆகியவை தமிழர்களுக்கு சாதாரணமாகவே ரொம்ப பரிச்சயமானவை.

IMG 5274 கொரோனா: தமிழரின் வாழ்வியலில் தடுப்பு முறைகள் இயல்பாகவே உள்ளது

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இப்போது நிலவேம்பை காய்ச்சி கசாயமாக குடித்து வருகின்றனர்.இம்மூலிகைகளை பயன்படுத்தி எமது அரசாங்கம் சுவ தாரிணி என்கிற பெயரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற ஆயுர்வேத பானத்தை தயாரித்து நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருகின்றது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு தர வல்ல இப்பானத்தை நாம் எமது இல்லங்களில் மிக இலகுவாக தயாரித்து குடிக்க முடியும், மேற்குறிப்பிட்டு சொன்ன மூலிகைகளில் ஒன்றையோ, பலதையோ, முழுதையோ பயன்படுத்தி பானத்தை தயார் செய்து குடிக்கலாம்” என்றார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பிரதேச செயலாளரிடம் ஒரு தொகை சுவ தாரிணி பான மருந்து பொதிகள் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. அதே போல நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கும் பொதிகள் பேராளர்களால் கையளிக்கப்பட்டன.