மாவீரர் நினைவு கூரல்- அரியநேத்திரனுக்கும் நீதிமன்றம் தடைஉத்தரவு

126
178 Views

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கும் மாவீரர் நிகழ்வு மற்றும் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மட்டக்களப்பில் நடத்த நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைதடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் இன்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இரங்கை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்தினின் வீட்டுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது.

21-11-2020 தொடக்கம் எதிர்வரும் 27-11-2020, வரை மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரனோ அவர் கட்சி சார்ந்தவர்களோ ஏனையோர்களோ அவ்வாறான நினைவு தினம் நடாத்தவும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தினை கொண்டாடவும் தடைவிதிக்கப்படுவதாக தெரிவிகக்பபட்டுள்ளது.

பா.அரியநேத்திரனுடன் அரசடித்தீவை சேர்ந்த நடராசா சுரேஷ்,கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம்,களுவாஞ்சிகுடி நாகலிங்கம் சங்கரப்பிள்ளை,நொச்சிமுனை ச் சிகரன் நிஷாந்தன்ஆகியவர்களுக்கு எதிராகவும் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here