மட்டு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று – கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

100
271 Views

மட்டக்களப்பு நகரில் மேலும் ஒரு தொற்றாளர் நேற்று மாலை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலேயே 74வயதுடைய பெண்னொருவர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்தவரே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் இருந்து வரும் போதே சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்ததாகவும் சுகாதார பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here