வாழைச்சேனையில் தனிமைப் படுத்தல் கட்டுப் பாடுகளைத் தளர்த்த முடிவு

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு, நாளை முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படுகிறது.

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு நாளை  காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப் பட்டுகின்றது.

பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப் பட்டவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவினைச் சேர்நத பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப் பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.

DSC 0642 வாழைச்சேனையில் தனிமைப் படுத்தல் கட்டுப் பாடுகளைத் தளர்த்த முடிவு

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 6வது கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பில் இனங்காணப்பட்ட 82 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று தினங்களாக  மேற்கொள்ளபட்ட பி. சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில் எவருக்கும் தொற்றில்லை என்ற முடிவுகளுக்கமையவே இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.