நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கத் திட்டம்! பௌத்த துறவிகள் விஜயம்

744
1,088 Views

நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு, யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை பௌத்த சின்னமாக காண்பித்து ஆக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதியிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந்தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சி இடம்பெறுகின்றதா? என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here