மைக் பொம்மியோவை நம்புகின்றோம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம்

87
173 Views

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்மியோ, எமக்கான தீர்வினைப் பெற்றுத் தருவார் என நம்புகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கிளிநொச்சி அலுவலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி, “எமக்கான நீதி எப்போது யார் பெற்றுத் தருவார் என்று நாம் வீதியிலே காத்து இருக்கின்றோம். எங்களுடைய இந்த போராட்டமானது எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடரும் என கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

சர்வதேச நாடுகளில் இருப்பவர்கள் எங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றோம் சென்ற வாரம் வந்திருந்த அமெரிக்க ராஜதந்திரி மைக் பொம்மியோ அவர்களை நாம் சந்திப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த போதும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கொடூர நோய் காரணமாக அவரை சந்திக்க முடியாது போய்விட்டது. இருப்பினும் எமது நீதிக்கான கோரிக்கையினை நாம்  அவருக்கு அனுப்பி வைத்து இருக்கின்றோம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எமக்கான நீதியினை பெற்று தருவார் என நாம் நம்புகின்றோம்” என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here