புதிய திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு

சிறீலங்கா அரசு கொண்டுவந்துள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 5 அமைப்புக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

புதிய சட்டம் நீதிக்கான சுதந்திரத்தை பாதிக்கும் என அவை தெரிவித்துள்ளன. பொதுநலவாய நீதிபதிகள் அமைப்பு, பொதுநலவாய சட்ட கற்கைநெறிகள் சபை, பொதுநலவாய சட்டவாளர்கள் அமைப்பு, ஊடகவியலாளர்கள் அமைப்பு, நீதிபதிகளுக்கான அமைப்பு ஆகியவையே இந்த கண்டன அறிக்கையை இந்த வாரம் வெளியிட்டுள்ளன.

நீதியாளாகளை நியமிக்கும் அதிகாரமானது அரசியல் அமைப்பு சபையிடம் இருந்து நீக்கப்பட்டது மிகவும் ஆபத்தானது. சிறீலங்கா அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டமானது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும், அனைத்துலக விதிகளின் தரத்தை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என அவை தெரிவித்துள்ளன.