சிறீலங்காவின் நலனை கருத்தில் கொண்டே நல்லிணக்க நடவடிக்கை- அரசாங்கம் கருத்து

சிறீலங்காவின் நலனை கருத்தில் கொண்டு பயனளிக்க கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உண்மை நீதி இழப்பீடு மற்றும் மீளாநிகழாமைஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது சிறீலங்கா பிரதிநிதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறீலங்காவிற்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்றும்  கூறியுள்ள அரசாங்கம், மக்கள் அவ்வாறான கட்டமைப்பிற்கான ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் கூறியுள்ளது.

அத்தோடு ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் சிறீலங்காவிற்கு விஜயம்மேற்கொண்ட பின்னர், உண்மை நீதி இழப்பீடு மீளநிகழாமை போன்ற விடயங்களில் சாதிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அறிக்கையாளரின் அறிக்கை உண்மையாகவும் சாதகமாகவும் குறிப்பிடவில்லை என சிறீலங்கா மேலும் தெரிவித்துள்ளது.