மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு

122
177 Views

அனர்த்தங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்தங்கள் நிகழும் போது பாதுபாப்பது என்பது தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (14) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கலந்துரையாடலாக இடம்பெற்ற இப்பயிற்சிக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலைவரிசியின் பணிப்பாளல் கலாநிதி எஸ்.மோசஸ், உலக வரைபட நிபுனர் எம்.சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினர். அனர்தங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் அதாவது மனிதர்களாளும் எற்படுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளவேளைகளில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு மக்களுக்கு செய்திகளை வழங்குவது தொடர்பாக பிராந்திய ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

மேலும் இடர்காலங்களில் சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் ஏனை மக்களையும் அனர்தங்களில் இருந்து எவ்வேளையும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களும் பத்திகைத்துறையினரும் உதவியாக இருப்பது அவசியமானது எனவும் இங்கு வளவாளர்களினால் வலியுறுத்தப்பட்டது.இதன்போது மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here