தவ பூமியாகிய “வேலோடும் மலை” முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

150
247 Views

நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை” இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டி, இலுக்குச்சேனை முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்த, போகர் பெருமான் தவமியற்றிய அற்புதமான சித்தர்களின் தவ பூமியாகிய “வேலோடும் மலை”கணிக்கப்படுகின்றது.

இந்த ஆலயத்தினை சூழ சிவலிங்கமும்,18 சித்தர்களின் சிலைகளும் நாகத்தின் ஆலயங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

12ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த மாபெரும் கும்பாபிஷேகமானது சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் அகில உலக மஹா சித்தர்களின் குரல் அறக்கட்டளையின் ஆலோசகரும், காசி இந்து பல்கலைக்கழக வேத ஆச்சாரியாருமகிய ஸ்ரீலஸ்ரீ சிவ சங்கர் குருஜி அவர்களின் நெறியாக்கையின் கீழ், சித்தர்களின் குரல் ஆஸ்தான சிவாச்சாரியாராகிய இலங்கை சப்தரிஷி இந்து குரு பீடாதிபதி, வேதாகம வித்யாபாதி, சாகித்ய பாஸ்கரன் சிவஸ்ரீ.குமார விக்னேஸ்வர குருக்கள் பிரதம சிவாச்சாரியாராக பங்கேற்க, இலங்கையில் தர்ம சாஸ்தா குருகுல வேத வாத்தியார் வேதாகம ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ. மகாதேவா வாத்தியார் தலைமையில் கீழ் இலங்கையில் புகழ் பூத்த சிவாச்சாரியார்களும் கலந்துகொண்டனர்.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று யாகம்,விசேட பூஜைகள் நடைபெற்று கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மகா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றன.

வேல்தாங்கியுள்ள மூலஸ்தானம்,பரிபாலன மூர்த்திகள்,18சித்தர்களை கொண்ட ஆலயம் உட்பட அனைத்து ஆலங்களிலும் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற சித்தர்களின் குரல் ஆஸ்தான நாதஸ்வர வித்வான், நாதஸ்வர இசை உலக சக்ரவர்த்தி, கலைமாமணி சூஈழநல்லூர் சூபாலமுருகன் தலைமையில் இலங்கையின் புகழ் பெற்ற நாதஸ்வர தவில் வித்வான்களின் சிறப்பு நாதஸ்வர தவில் கச்சேரி இங்கு நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here