விக்கியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு கோர யாருக்கும் உரிமை இல்லை: வாசுதேவ

117
182 Views

“தமிழ் மக்கள் தேசியக் கூட்ட ணியின் தலைவர் விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாடாளுமன்ற ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதற்காக அவரது நிலைப்பாட்டுக்கு இணங்க வேண்டிய தேவையும் இல்லை” என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழ் மக்களின் பூர்வீகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. அதனைத் தெரிவிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது. அதனை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்த யாருக்கும் முடியாது. சபாநாயகரும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற ஹன்சாட்டில் பதிவாகிஇருக்கின்றது. அதனை அதிலிருந்து நீங்குமாறு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நிலைப்பாட்டை நாராளுமன்றத்தில் தெரிவிக்கும் உரிமை இருக்கின்றது. அதனடிப்படையிலே சபாநாயகர் அவர் தெரிவித்த கருத்துக்களை மறுக்கவில்லை. அத்துடன் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அனைவரும் இணங்க வேண்டும் என்றில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here