ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விவகாரம்; முடிவு எடுக்கும் அதிகாரம் சஜித்திடம்

121
177 Views

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், பங்காளிக் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுக் கட்சி தலைமையகத்தில் நடந்தது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பங்கிடுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து தேசியப்பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டது. தேசியப்பட்டியல் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று வரை வரை காலக்கெடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here