மண்டைதீவு படுகொலை;32 மீனவர்கள் கொடூரமாய் கொல்லப்பட்ட நாள்

321
282 Views

1986 ஜீன் 10ம் திகதி குருநகர் துறையில் இருந்து தூயஒளி படகு 31 மீனவர்கனை சுமந்த படி புறப்பட்டது. முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் இறங்கினார்கள் மீனவர்கள். 27 பேர் கரையிறங்க நால்வர் படகில் நின்றனர்.

வலை வளைக்க ஆயத்தமாக மீனவர்கள் தயாராக பலவிதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கினர் சிங்களக் கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலி கடலில் நிற்கும்படி உறுமினார்கள்.

பின்பு கோடரி, வாள், கத்தி என்பனவற்றாரால் வெட்டியும் கொத்தியும் அடித்தும் கொன்றனர் 31 பேரையும். மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய்ச் சுடர்ந்தது அன்று.

‘குருதி சிந்தப்பட்ட இடத்தில் மறதி என்ற மரம் வளர்வதில்லை’ என்பது முதுமொழி எமக்கிழைக்கப்பட்ட அநீதிகளை என்றும் மறவாதவர்களாக அவற்றை எமது சந்ததிக்கும் எடுத்துச் செல்பவர்களாக நாம் இருப்போம்.அநீதிகளுக்கான நீதிதேடலில்
அனைவரும் ஒண்றிணைத்து பயணிப்போம்.

 

 

 

 

.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here