இணுவிலில் தங்கியிருந்த இந்திய பிடவை வியாபாரிக்கு கொரோனா? 3 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன

191
226 Views

யாழ் இணுவில் பகுதியில் சில வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கிடைத்த தகவலையடுத்து, இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வந்து இணுவிலில் தங்கியிருந்த ஒருவர், கடந்த 31ஆம் திகதி இந்தியாவிற்கு மீள அழைத்து செல்லப்பட்டிருந்தார். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதாக செய்தி வெளியாகியது.

இது குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியதாவது,

“புடவை வியாபாரியொருவர் இணுவிலில் தங்கியிருந்தார். கடந்த 31ஆம் திகதி அவர் இந்தியா சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பாக எமக்கு தகவல் ஒன்று வழங்கப்பட்டது. அது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அந்த தகவலை உறுதிசெய்யுமாறு இந்திய தூதரகத்தை கோரியுள்ளோம். தற்போது, இணுவிலில் 3 வீடுகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here