படுகொலைகளில் ஈடுபட்டவர்களை நாம் நீதியின் முன் நிறுத்த வேண்டும் – பிரித்தானியா தொழிற்கட்சி

படுகொலைகளில் ஈடுபட்டவர்களை நாம் நீதியின் முன் நிறுத்த வேண்டும், அது உண்மையை கண்டறிதல், விசாரணைகள் மற்றும் நல்லிணக்கங்கள் மூலம் தான் எட்டப்படும் என முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் கெயர் ஸ்ராமெர் தனது ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று எனது நினைவுகள் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுடன் தான் உள்ளது. அவர்கள் முள்ளிவாய்க்கால் 11 ஆவது ஆண்டு நினைவு நாளை நினைகூருகின்றனர்.

உள்நாட்டு போரில் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்போன மக்களை நினைவு கூரும் நாள் இது. தற்போதைய சூழ்நிலையில் பொது இங்களில் ஒன்று கூடுவது சாத்தியமற்றது எனினும், எமது நாட்டில் உள்ள தமிழ் சமூகம் இந்த நினைவுகூரலில் ஒருங்கிணைவார்கள்.

இந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்களை நாம் நீதியின் முன் நிறுத்த வேண்டும், அது உண்மையை கண்டறிதல், விசாரணைகள் மற்றும் நல்லிணக்கங்கள் மூலம் தான் எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.