ராஜித சேனாரட்ண கைது

151
100 Views

சிறீலங்காவின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

வெள்ளை வேன் செய்தியாளர் மாநாடு தொடர்பில் அவருக்கு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் வழங்கப்பட்ட பிணை இன்று மேல் நீதிமன்றத்தால் ரத்துச் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது இல்லத்தை சுற்றிவளைத்த பொலில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடுதல் நடத்திக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்றிரவு சரணடைந்ததார்.

அதன்பின்னர் கைதான அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here