சுமந்திரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2004 தேர்தல் அறிக்கை பற்றி தெரியுமா…?

314
233 Views

தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தையும் தவறு என்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கும் எந்த வித தொடர்புகளும் இல்லை எனவும் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிற்கான நேர்காணலில் கூறியிருந்தார். இந்த நேர்காணல் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை ஈழத்தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்றுக்கொண்டதையும் ,அவர்களின் போராட்ட இலட்சியத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு அமைப்பாக அது இருந்ததையும் அவர்களின் தேர்தல் அறிக்கையே தெளிவாக எடுத்துக்காட்டுவதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை தமிழ் மக்களின் தலைமையாகவும், விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்று, தமிழ்த் தேசிய இனத்தின் சார்பிலான விடுதலைப்புலிகளின் போராட்ட இலட்சியத்திற்கு நேர்மையாகவும் உறுதியாகவும் முழு ஒத்துழைப்பை நல்குவோம்.”

2004 ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் 10 ம் பக்கத்தில் மேற்குறிப்பிட்டவாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here