தமது தவறுகளை மறைப்பதற்கு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர் – சீனா தூதுவர்

கோவிட்-19 நோய் தொடர்பில் தாம் மேற்கொண்ட தவறுகளை மறைப்பதற்காகவே சில நாடுகள் அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றன என சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் கூ வெய் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கோரிக்கைகளை விடும் அரசியல்வாதிகள் உலக சமுதாயத்தின் கருத்துக்களை கேட்பதில்லை. அவர்கள் இந்த நோயை தமது நாடுகளில் கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டவர்கள். எனவே இந்த தலைவர்கள் மீது அந்த நாட்டு மக்கள் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

வைரஸ் இயற்கையாக உருவாகியது என விஞ்ஞான சமூகம் தொடர்ந்து தெரிவித்துவரும் போதும் சிலர் அது ஆய்வுகூடத்தில் உருவாக்கியதாக தற்போதும் சிலர் கூறுகின்றனர். எனினும் அவர்கள் கூறும் பொய்களை நம்புவதற்கு தற்போதும் ஒரு தொகுதி மக்கள் இருப்பது என்பது மிகவும் கவலையானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.