பௌத்த தேசத்தை காப்பாற்ற மக்களிடம் நிதி கேட்கிறது சிறீலங்கா

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்கியுள்ள சிறீலங்கா மிகப்பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பௌத்த பேரினவாத சிந்தனையை மக்களிடம் விதைத்து அதன் மூலம் நிதியை திரட்ட முற்பட்டுள்ளது சிறீலங்கா அரசு.

தற்போதைய நெருக்கடியில் அரசுக்கு உதவி செய்து பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறீலங்கா தேசத்தை காப்பாற்ற மக்கள் அனைவரும் தமது மே மாத சம்பளத்தை பகுதியாக அல்லது முழுமையாக வழங்கவேண்டும் என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளர் பி. ஜெயசுந்தரா தெரிவித்துள்ளார்.

பல அரச பணியாளர்களுக்கு சிறீலங்கா அரசு இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளது.

இதனிடையே, பௌத்த தேசம் என்ற சிறீலங்கா அரசின் கோரிக்கை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.