பெருமளவான கடற்படையினர் பாதிப்பு – அவமதிக்க வேண்டாம் என கோரிக்கை

191
209 Views

சிறீலங்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிறீலங்கா கடற்படையினரை அதிகம் பாதித்து வருகின்றது. இன்று (29) வரை 226 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 147 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள். சிறீலங்கா கடற்படையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடற்படை முகாங்களுக்கு அருகில் உள்ள மக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாகவும், தென்னிலங்கையில் கடற்படையினரின் குடும்பங்கள் அவமதிக்கப்படுவதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடற்படையினரை அவமதிக்க வேண்டாம் என தென்னிலங்கை மக்களுக்கு சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here