கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது!!

109 Views

வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ம 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்

அண்மையில் வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை உடைத்த கொள்ளையர்கள் தொலைக்காட்சி, சலவை இயந்திரம், மடிக்கணணி, உட்பட 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு கடந்த வாரம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானாவடுவின் வழிப்படுத்தலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தில் தேக்கவத்தை, நெளுக்குளம், மகாறம்பைக்குளம் சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here