வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!!அரச அதிபர்!!

118 Views

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்தகநிலையங்களையும் நாளையதினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றுஇருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார். எனவே நகரின் பகுதிகளை தொற்றுநீக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், மற்றும் சந்தைகள் என்பன நாளையதினம் பூட்டபட்டிருப்பதுடன் பொதுப்போக்குவரத்தும் இடம்பெறாது என்று அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here