இப்பன்கடுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து.

210 Views

தம்புள்ளை-இப்பன்கடுவ-பெல்பத பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை பிரதேசத்தில் ஈரந்து கலேவெல பிரதேசம் நோக்கிய பயணித்த உந்துருளியொன்றும் அதற்கு எதிர்திசையிலிருந்து வந்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உந்துருளியின் பின் ஆசனத்தில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதோடு, உந்துருளி சாரதி மற்றும் விபத்தின் போது குறித்த இடத்தில் பயணித்த மற்றுமொரு உந்துருளியின் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த நபர் மான்கேணி பகுதியில் வசித்து வரும் 18 வயதுடையவர் என கலேவெல காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here