தமிழ் நாடும் அதன் மரபுச் சின்னங்களும்- யதீஸ்குமார்

317
220 Views

பாரம்பரிய மரபுகளை கொண்டிலங்கும் நாம் இன்றைய சந்ததியினருக்கும் நமது வருங்கால சந்ததியர்க்கும் அவற்றை எடுத்துச் செல்வது நமது தலையான கடமையாகும்.

உலக ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல், பண்பாடு அமைப்புக் குழு 1972 ஆம் ஆண்டு உலக பாரம்பரியச் சின்னங்களையும், இயற்கை மரபுகளையும் பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்றியது. இதனுடைய தலையாய குறிக்கோள் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளில் உள்ள மரபுச் சின்னங்களைத் தெரிவு செய்து அவற்றை உலக மரபுச் சின்னங்களாக அறிவித்து, பாதுகாத்து பன்னாட்டு மக்களும் எதிர்கால சந்ததியினரும் பயனுற வழிவகை செய்துள்ளார்கள். இதன் மூலம் உலக அளவில் பாரம்பரியச் சின்னங்களை தெரிந்து கொள்வதற்கும் பன்னாட்டு பரிமாற்றத்திற்கும் வழிவகை செய்துள்ளார்கள்.

உலக அளவில் இதுவரை 1121 சின்னங்கள், மரபுச் சின்னங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 869 பண்பாட்டு சின்னங்களாகவும் 213 இயற்கை வளம் சார்ந்ததாகவும் இவை இரண்டும் கலந்ததாக 39 சின்னங்களும் அடங்கும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளான 167 நாடுகளிலிருந்தும் 1977 ஆம் ஆண்டு முதல் இம் மரபுச் சின்னங்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன.

பன்னாட்டு மரபுச் சின்ன ஐக்கிய நாடுகள் அமைப்பும், பன்னாட்டு இயற்கை மரபு மற்றும் புனரமைப்பு அமைப்பும், பன்னாட்டு பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு அமைப்பும் இணைந்து செயற்பட்டு உலக மரபுச் சின்னங்களை பாதுகாத்து வருவதுடன் பராமரிப்பு மேற்கொள்ளும் பெரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவில் 38 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன . அவற்றில் 30 பண்பாட்டுச் சின்னங்கள் ஆகும். 7 இயற்கை வளம் சார்ந்த சின்னங்களாகவும், ஒன்று இரண்டும் சார்ந்த சின்னங்களாகவும் உள்ளன.

தமிழகத்தில் உலக மரபுச் சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவை மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்திய குடைவரை மற்றும் கட்டிட கோயில்கள் 1984ஆம் ஆண்டும், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் (சோழர்கால ஒருங்கிணைந்த மரபுச்சின்னங்கள்) 1987ஆம் ஆண்டும் தெரிவு செய்யப்பட்டன.

இவை தமிழகத்தின் பாரம்பரிய கலை, சிற்பக்கலை, தொழில்நுட்பம் மற்றும் மிகச் சிறந்த படைப்பாற்றலை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன.

நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து பாரம்பரியக் களமாகவும் (Mountain Railways of India 1999), மேற்குத் தொடர்ச்சி மலை 2012ஆம் ஆண்டு முதல் இயற்கை வளம் சார்ந்த பகுதியாக உலக பாரம்பரிய சின்னத்தில் உள்ளன.

உலக பரம்பரிய வாரமானது நவம்பர் மாதம் 19ம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 18ஆம் திகதி உலக பாரம்பரிய நாள், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here