குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகின்ற கோரோனா  உலகம் முழுவதும் 24 லட்சத்துக்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.  வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.6.5 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

கோரோனா என்பது கிட்டத்தட்ட சளிகாய்ச்சல் போலவே வெளிப்படுகிறது. இதற்கு மருந்து கிடையாது. ஆனால் காய்ச்சல் வரும் போது ஏற்படும் இருமல், மூச்சு விட சிரமம் போன்ற பிரச்சனைகள் கோரோனாவின் போது அதிகம் ஏற்படுகிறது. இதனால் தற்போது காய்ச்சல் மருந்துகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதனை ஓரளவு கட்டுப்படுத்த காய்ச்சலுக்கு அளிக்கப்படும் பாராசிட்டமால் மற்றும் வேறு சில மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரைகளுடன் பயன்படுத்தப் படுகிறது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை இந்தியா கொடுக்காவிட்டால் உரிய பதிலடி அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டும் தொனியில் பேசியுள்ளதை அடுத்து அந்த மருந்தின் பெயர் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

உலக அளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை தயாரிக்கும் திறன் இந்தியாவில் உள்ளது. இதைக் கொண்டு 200 மில்லிகிராம் அளவுகொண்ட 20 கோடி மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். மலேரியா, மூட்டுவலி உள்ளிட்ட சிகிச்சையில் இவை மருத்துவரின் ஆலோசனைப்படிப் பயன்படுத்தப்படுகின்ற மருந்தாகும்chloroquine phosphate tablet குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

கோரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்குப்பின், இந்த மாத்திரைகளை ஏற்றுமதியை மத்தியஅரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.

உண்மையிலேயே இந்த மருந்துக்கு நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளதா, தொற்று நோயிலிருந்து மனிதனை காக்கும் அற்புதத்தை நிகழ்த்துமா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது மலேரியா காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இந்த மருந்து இரண்டாம் உலக போரின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் நோய்க்கும் கொடுக்கப்படுகிறது. இந்த ஆன்டி மலேரியா மருந்தை உட்கொண்டால் தசை மற்றும் மூட்டுகளில் வலி, தோலில் அரிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் அழற்சி, காய்ச்சல், சோர்வு ஆகிய அறிகுறிகளை காட்டும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 40 கோரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொடுக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 3 முதல் 6 நாட்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மலேரியா தடுப்பு மருந்து Sars Cov 2 தொற்று உடலில் உள்ள செல்களில் வேகமாக நுழைவதை தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் சீனாவில் ஒரு நோயாளிக்கு ஹைட்ராக்ஸிகுளோராகுயின் கொடுக்கப்பட்டு நிலைமை மோசமானது மேலும் 4 நோயாளிகளுக்கு கல்லீரல் கோளாறு, வயிற்றுபோக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது. ஒரு நோயை தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு மருந்து சிறந்த முறையில் சோதிக்கப்படாமல் பயன்படுத்தினால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கோரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரெஞ்சு மருத்துவர்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டிருக்கின்றனர். பல வருடங்களாக இந்த மருந்து மலேரியா பாதிப்புக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது ஒட்டுண்ணியை அழிக்கும் தன்மையுடையதாகக் கருதப்படுகிறது. 6 நோயாளிகளிடம் இந்த மருந்தை அவர்கள் சோதனை செய்துள்ளனர். அதில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுடன் அஜித்ரோமைசினும் இணைத்துக் கொடுக்கும்போது இந்த மருந்து எந்த பயனையும் அளிக்கவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது.chloroquine 80 குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

இதைக்குறித்து அந்நிறுவனத்தில் தலைமை மருத்துவர் ரவுல்ட்டின் ஆய்வு அறிக்கை வெளியிட்டார். பரிசோதிக்கப்பட்ட 3 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ஐ.சி.யுவில் வைக்கப்பட்டனர். மற்றொருவர் உட்கொள்வதை தவிர்த்து விட்டார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான அடுத்த நாள் அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில்,

“ஹைட்ராக்ஸிகு ளோரோகுயினுடன் அஜித்ரோமைசினும் இணைத்து கோரோனா மருந்தாக எடுத்துக்கொண்டால் மருத்துவ வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணரலாம்” எனக் குறிப்பிட்டார். இதே கூற்றை பல முறை திரும்ப திரும்ப கூறவும் செய்தார். கடந்த சனிக்கிழமை இந்த மருந்து ஒரு கேம் சேஞ்சர் எனவும் கூறியிருந்தார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியாவுக்கு சிகிச்சை அளிப்பதை விட முடக்குவாதம், லூபஸ் போன்ற நோய்களுக்கும் மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சில நேரங்களில், உடலில் உள்ள அதிகபடியான நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த இந்த மருந்து திறம்பட உதவுகிறது. ஒருவேளை வைரஸ்கள் செல்களுடன் இணையும் வேகத்தை இது குறைக்க உதவலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலிய, இஸிரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்துவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன எனத் தெரிவித்தனர். ஆனால் முழுமையான பாதுகாப்பு குறித்து அவர்கள் கருத்துக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.donald trump chloroquine 0323201 குளோரோகுவின் என்ற மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா? -நிலவன்(ஆஸ்திரேலியா)

இந்த மாதிரியான சோதனை தருணங்களில் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை அளிக்கு விதமாக செயல்படவேண்டும். இந்த நோய்க்கு சிகிக்சை இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு தவறான நம்பிக்கை அளிக்கக்கூடாது” என அமெரிக்க மருத்துவர்கள் ட்ரம்ப்பின் நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்தனர்.

மேலும், சிலர் ட்ரம்ப் மக்களின் மத்தியில் மிகை நம்பிக்கையை ஏற்படுத்திவருகிறார் எனவும் கூறிவருகின்றனர். இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கோரோனா நோய்க்கு எப்படி பயன்படும் என்பதை இன்னும் மருத்துவ உலகம் நிரூபிக்காத நிலையில் இந்த மருந்தைக் குறித்த ஆய்வுகள் முடக்கிவிடப்பட்டு இருக்கிறது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய செய்திகளால் மக்கள் அந்த மருந்துகளை வாங்கி குவிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த மருந்து  மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்புக்காகவே இது பயன்படுத்தப்படுகிறது.

ஜி20 குழுவில் இருக்கும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கோரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.