பிரதமரின் கருத்து தவறானது.

திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் வெளியிட்டுள்ள கருத்து தவறானது என தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பொதுத் தேர்தலை விரைவில் நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாக பொதுத் தேர்தலினை ஒத்திவைக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை என்ற கருத்து நேற்றைய தினம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24ஆவது பிரிவின் மூன்றாவது உப பிரிவின்படி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டு நெருக்கடி நிலைமை அல்லது எதிர்பார்க்காதபடி கூழ்நிலைகள் ஏற்படும் போது திட்டமிடப்பட்டபடி அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தலினை நடத்த முடியாது போனால் தேர்தல்கள் ஆணையாளர் மீண்டும் பிரகடனத்தின் மூலம் தேர்தலுக்கு வேறொரு திகதியினை நிர்ணிக்க முடியும் என்று தான் கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.