உரிய மருத்துவ பற்றுச்சீட்டு மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

குளோரோகுயின் “Chloroquine” என்ற மருந்தால் மாத்திரம் கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுக்க முடியாது என்பதால் குறித்த மருந்தை தேவையற்ற வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம் என கொவிட் – 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு செயலணி பொது மக்களை கேட்டுள்ளது.

உரிய மருத்துவ பற்றுச்சீட்டு இன்றி குளோரோகுயின் “Chioroquine”மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் வைத்திய சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 5 இலட்சம் குளோரோகுயின் மாத்திரைகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு முழுவதிலும் பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை இனம் கண்டு அந்த இடங்களில் கிருமி ஒழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம், குணசிங்கபுர தனியார் பஸ் நிலையம், மருதானை ரயில் நிலையம், கொச்சிக்கடை புனிய அந்தோனியார் தேவாலயம் மற்றும் கங்காராம விஹாரை ஆகிய இடங்களிலேயே இந்த கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.