கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நினைவுப் பேருரைககள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நினைவுப் பேருரைகளின் வரிசையில் முதலாவது நினைவுப் பேருரையானது இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

வடக்கு-கிழக்கு மாகாண சபையின் கல்வி,கலாசார, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளரும், வடக்கு-கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான காலஞ்சென்ற அமரர் க.தியாகராஜா அவர்களின் “தியாகராஜா அரங்கு” ஞாபகார்த்த நினைவுப் பேருரையானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (23) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.IMG 0047 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நினைவுப் பேருரைககள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் இடம்பெறும் இந்த நினைவுப் பேருரை நிகழ்வில் அமரர்.க.தியாகராஜா அவர்களைப் பற்றிய அறிமுக உரையினை,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜனாப்.எம்.கே.எம்.மன்சூர் அவர்களும் நினைவுப் பேருரையாளருக்கான அறிமுக உரையினை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் வே.தவராஜா அவர்கள் நிகழ்த்துவதுடன்ä அமரர்.க.தியாகராஜா அவர்களின் நினைவுப் பேருரையினை மூத்த பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அமரர்.க.தியாகராஜா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் அமரர்.க.தியாகராஜா அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.