யாழ். நகரின் மத்தியில் திடீர் பௌத்த கொடி! மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது

276
191 Views

சிங்கள பௌத்த மயமாக்கல் மற்றும் நிலஆக்கிரமிப்புக்கான ஆரம்ப புள்ளியாக யாழ்.நகரின் மத்திய பகுதியில் சிங்கள பௌத்த கொடி நிறுவப்பட்டுள்ளது. யாழ். பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் இந்த கொடி நிறுவப்பட்டுள்ளது.

நன்கு திட்டமிடப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட கற்களை ஒன்று சேர்த்து ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு பின்னர் ஒரு கம்பியில் இக் கொடி நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் அவ் கொடியின் கீழ் மலர்கள் சூடி வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த கடை வியாபாரிகளுடன் வினாவிய போது இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ள இது நிறுவப்பட்டுள்ளதாகவும் தாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்திருப்பதாவது:

சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலைங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. ஆனால் அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோ இன் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ்த்தேசத்து நிலங்களினை இவ் வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்தமயமாக்கலுக்கு உட்படுத்தி அதனப் பறித்தெடுகின் செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்துகூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ அதே அக்கறை எமது தாயகப்பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு அக்கறை உள்ளது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here