சூரிய கிரகணத்தின் போது யாழில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று காலை சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதனை அவதானிக்க முடிந்துள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான 2010ஆம் ஆண்டு தோன்றியுயள்ளது. இம்முறை இந்த சூரிய கிரகணம் மிகவும் தெளிவாக வடக்கிலேயே அவதானிக்க முடிந்துள்ளது.

நேற்று காலை 8.10 மணி முதல் காலை 11.24 மணி வரையில் சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. காலை 9.35 மணியில் இருந்து 9.38 வரையிலான 3 நிமிடங்கள் மிகவும் தெளிவான சூரிய கிரணம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தின் போது யாழில் மிகவும் இருண்ட தன்மை காணப்பட்டது. திடீரென வெப்பநிலை அதிகரித்து பாரியளவு குறைவடைந்ததனை அவதானிக்க முடிந்ததாக பேராசிரியர் சந்தன ஜனரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வெப்ப நிலை 40 பாகை செல்சியஸ் வரை அதிகரித்து மீண்டும் 26 பாகை செல்சியஸ் வரை குறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2555 1 சூரிய கிரகணத்தின் போது யாழில் ஏற்பட்ட மாற்றம்!