இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் மேற்கொண்ட செயல்! தீவிர விசாரணையில் பொலிஸார்!

169
87 Views

வெயாங்கொடை இராணுவ முகாமின் காவலரணில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வதுபிடிவல இராணுவ முகாமில் இருந்து உணவு எடுத்துச் செல்வதற்காக குறித்த சிப்பாய் உள்ளிட்டவர்கள் வெயாங்கொடை இராணுவ முகாமிற்கு நேற்று பிற்பகல் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த சிப்பாய் காவலரணில் தங்கியுள்ள நிலையில், அவரது துப்பாக்கியால் தலைப் பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

19 வயதுடைய சாதாரண சிப்பாய் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here