வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் கடந்த 14 இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் கண்டி வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
பிரதான ஈகை சுடரினை மாவீரர்களின் தாயாரான செபஸ்தியம்பிள்ளை புஸ்பவதி ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.



