மட்டக்களப்பில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் கைது!

192
193 Views

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மாலை பேருந்தொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதன் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதே திசையில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதி இழுத்துச்சென்றுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் அதில் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த இளைஞன் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விபத்தினை ஏற்படுத்திய பேருந்து மீது அப்பகுதி இளைஞர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here