2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச சேவையில் அத்தியாவசிய கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதுடன், சில கொடுப்பனவுகள் 100 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்பதற்காக தொகை கணக்கில் நியமனங்களை வழங்க முடியாது.
ஏதேனும் பதவிக்கு நியமக்கப்படும் நபர் அந்த துறை தொடர்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.அப்போது தான் அரச துறை வினைத்திறனாக அமையும்.
2027ஆம் ஆண்டு அரச சேவையில் 121,000 பேர் புதிதாக முறையான வழிமுறைக்கு அமைய இணைத்துக் கொள்ளப்படுவார்கள்” என்றார்.
“பெருந்தோட்ட கம்பனிகளுடனான குத்தகை கால ஒப்பந்தத்தை 2042 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீட்டிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்படும்.”



